அதிகரிக்கும் புதியவகை கொரோனா வைரஸ் - பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இங்கிலாந்தில் அதிகரித்துச் செல்லும் புதியவகை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து போக்குவரத்து வழிமுறைகளையும் மூடுவதாக பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு வருகை தரும் எவரும் கொவிட் பரிசோதனையில் தமக்கு தொற்று இல்லை என்பதற்கான ஆதாரத்தை காட்டவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப்புதிய நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி 15 வரை நடைமுறையில் இருக்கும்.அனைத்து போக்குவரத்துக்களும் திங்கள்கிழமை முதல் மூடப்படும்.இங்கிலாந்துக்கு வருபவர்கள் ஐந்து நாட்களில் கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தாவிட்டால் அவர்கள் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தலில் தங்க வைக்கப்படுவார்கள்.
பிராந்திய நிர்வாகங்களுடன் பேச்சு நடத்திய பின்னர் மேற்படி பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன், எல்லைப்பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படுமென தெரிவித்தார்.