அதிகரிக்கப்போகும் தேங்காய் எண்ணெய் விலை
தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தியாளர்கள் குழு ஒன்று இலட்சக்கணக்கான லீற்றர் தேங்காய் எண்ணெயை பதுக்கி வைத்து சந்தையில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்ள பல பாரிய உற்பத்தியாளர்கள் தேங்காய் எண்ணெய் இருப்புக்களை இரகசியமாக மறைத்து வருவதால் எதிர்காலத்தில் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 1000 ரூபாவாக இருக்கும் என கொழும்பு மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தரமற்ற தேங்காய் எண்ணெய்
தற்போது சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் சில்லறை விலை 500 ரூபாவாக இருந்து வருவதாகவும் பெரும்பாலான சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தரமற்றதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிகரித்த விலையில் பாம் எண்ணெய்
இறக்குமதி செய்யப்படும் பாம் எண்ணெய் விலை தேங்காய் எண்ணெயின் விலையை விட அதிகமாக இருப்பதால், உற்பத்தியாளர்கள் பாம் எண்ணெயை விற்க முடியாமல் உள்ளதால் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகமாக உயர்த்த முயற்சிப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
