நீதிமன்றங்களில் நீதிபதிகளின் வெற்றிடங்கள் அதிகரிப்பு: சட்டத்தரணிகள் சங்கம் கவலை
Ranil Wickremesinghe
Sri Lanka
Bar Association of Sri Lanka
By Laksi
உயர்நீமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,குறித்த பிரச்சினைகளுக்கு தீர்மானமிக்க முடிவு எட்டப்பட வேண்டும். இத்தகைய செயற்பாடானது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதன் காரணமாக உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசியலமைப்பு பேரவை மற்றும் அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதன் அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 22 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்