ரி20 கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த முதல் இந்தியர்
ரி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் (Sanju Samson) படைத்துள்ளார்.
தென் ஆபிரிக்காவில் (SA) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ரி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
ரி20 கிரிக்கெட்
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்கா அணி களத்தடுப்பை தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. அபிஷேக் சர்மா 7 ஓட்டங்களில் வெளியேறினார்.
சஞ்சு சாம்சனுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இந்த ஜோடி 66 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய திலக் வர்மாவும் அதிரடியாக ஆடி 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்தார், அவர் 50 பந்தில் 107 ஓட்டங்களில் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ஓட்டங்கள் குவித்தது.
சாதனை படைத்த இந்தியர்
வங்கதேச அணிக்கு எதிரான ரி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
முதல் 2 போட்டிகளில் மோசமாக விளையாடிய அவர், கடைசி போட்டியில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.
47 பந்துகளில் 111 ஓட்டங்களை விளாசிய அவர், ஏராளமான சாதனைகளை படைத்தார். இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ரி20 தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு மீண்டும் அளிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய சஞ்சு சாம்சன் தகது இரண்டாவது சதத்தை பூர்த்தியாகியுள்ளார்.
அதேபோல் ரி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த ரி20 போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |