அணிக்கு திரும்புகிறார் பும்ரா - இலங்கை இந்திய T20 துடுப்பாட்ட போட்டி இன்று ஆரம்பம்
சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான T20 துடுப்பாட்ட போட்டியின் முதலாவது போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது.
வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார், மேலும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பூனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் பல்வேறு காரணங்களால் அணியில் சேர்க்கப்படவில்லை.
03 போட்டிகள்
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 03 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கு மேலதிகமாக 03 ODI போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்தியா
ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா , சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல்/யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
இலங்கை
பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க.
பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார்
மேலும், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய துடுப்பாட்ட அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இதை இந்திய துடுப்பாட்ட வாரியத்தின் தேர்வு குழு அறிவித்துள்ளது.
கடந்த 2022 செப்டம்பரில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். முன்னதாக, இதே சிக்கல் காரணமாக அவர் ஆசியக் கோப்பை தொடரையும் தவறவிட்டிருந்தார்.
அவர் போட்டிகளில் விளையாட போதுமான உடற்திறனுடன் இருப்பதை இந்திய தேசிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
ஒருநாள் தொடர்
அதையடுத்து அவர் இலங்கைக்கு எதிராக வரும் 10-ம் திகதி ஆரம்பமாகவுள்ள உள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா
ரோகித் சர்மா , சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல் , இஷான் கிஷன் , ஹர்திக் பாண்டியா , வாஷிங்டன் சுந்தர், சஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா , முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
