சீருடையுடன் பியர் அருந்திய மாணவர்கள்- மடக்கிப்பிடித்த காவல்துறை
தவணைப்பரீட்சை முடிவடைந்த நிலையில் பியர் அருந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை கடற்கரையில் இன்று (22) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில்,
பாடசாலை சீருடையில் பியர் அருந்திய மாணவர்கள்

தவணைப் பரீட்சை முடிவடைந்த பின்னர், பியர் கான்களை கொள்வனவு செய்த மாணவர்கள், கடற்கரையில் வைத்து பியர் அருந்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாடசாலை சீருடையில் பியர் அருந்திய 5 பாடசாலை மாணவர்கள், விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பிடிபட்டுள்ளனர் என்று பாணந்துறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரபல பாடசாலை மாணவர்கள்

பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்கும் 16 மற்றும் 15 வயதுடைய மாணவர்களைக் கொண்ட குழுவொன்றே பிடிபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி மாணவர்களை ஒப்படைக்கவுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.