டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் மாற்றம்
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 340.86 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று (08) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 339.73 ஆக காணப்பட்டது.
பொருளாதார காரணி
இதேவேளை, ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442.55 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 457.75 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.26 ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.80 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.64 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.70 ஆகவும் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |