ஆடையைக் கழற்றிக் காண்பிக்கவா..! சபையில் கத்திய அர்ச்சுனா எம்.பி
ஆடையைக் கழற்றிக் காண்பிக்கவா என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா ஆவேசமாக சத்தமிட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் இன்று (09.07.2026) நாடாளுமன்ற சபை அமர்வின் போது இடம்பெற்றது.
யாழ். மாவட்ட சுயேச்சை ராமநாதன் அர்ச்சுனா, சபைக்கு அணிந்து வந்திருந்த ஆடை தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் சபையில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
கண்ணியமான உடை
உறுப்பினர் ஜெகதீஸ்வரன் எழுப்பிய பிரச்சினைக்கு உடனடியாகப் பதிலளித்த அர்ச்சுனா எம்.பி., தான் அணிந்து வந்திருக்கும் ஆடை நாடாளுமன்ற மரபுகளுக்கு உட்பட்டது தான் என்று வாதிட்டார்.

நான் நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், வேண்டுமென்றால் கழற்றிக் காண்பிக்கவா?” என்று சவால் விடுத்தார்.
இந்தச் சம்பவம் சபையில் சிறிது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தலையிட்ட சபாநாயகர், “ஆடை குறித்த விவாதம் தேவையில்லை, அது ஒரு பிரச்சினையல்ல” என்று தெரிவித்து, அர்ச்சுனா எம்.பி.யை தனது ஒழுங்குப் பிரச்சினையைச் சமர்ப்பிக்க அனுமதித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 2 மணி நேரம் முன்