கழுத்து நெரிக்கப்பட்டு பெண் மருத்துவர் கொலை - சந்தேகநபர்கள் நீதிமன்றுக்கு

Sri Lanka Police Nuwara Eliya Death
By Thulsi Jul 09, 2026 05:42 AM GMT
Report

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த இருவர் உட்பட நால்வர் இன்று (09) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை வைத்தியர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு தினசரி தொடருந்து சேவை - பறந்த கோரிக்கை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு தினசரி தொடருந்து சேவை - பறந்த கோரிக்கை

மரண பரிசோதனை

இந்நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெண் மருத்துவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மரண பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கழுத்து நெரிக்கப்பட்டு பெண் மருத்துவர் கொலை - சந்தேகநபர்கள் நீதிமன்றுக்கு | Female Physiotherapist Suspects Produced In Court

நுவரெலியா பகுதியில் வைத்து பெண் உடலியல் நிபுணரை கொலை செய்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய குண்டசாலை பிரதேச சபையில் பணியாற்றும் சாரதி, மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோரே இவ்வாறு இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

நுவரெலியா காவல் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் (26) ஆம் திகதி நுவரெலியா நீதவான் புத்திகா ஹர்ஷனி தர்மதாஸவிடம் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு மோதலின் தீவிரம்! நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

நீர்கொழும்பு மோதலின் தீவிரம்! நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு பாதாள உலக அச்சுறுத்தல்

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு பாதாள உலக அச்சுறுத்தல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026