எமது சுதந்திர தினத்தை கெடுக்க நினைத்தால் பதிலடி கொடுப்போம்! ரஷ்யாவிற்கு உக்ரைன் எச்சரிக்கை
உக்ரைன் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில், அதைக் கெடுப்பதற்காக ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனின் சுதந்திர தினமான இன்று (24) பொதுமக்களுக்காக சிறப்பு உரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று உக்ரைன் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில், அதைக் கெடுப்பதற்காக ரஷ்யா மோசமாக எதையும் செய்யலாம்.
உக்ரைன் மீது இன்று தாக்குதல்
விடயம் என்னவென்றால், உக்ரைனுக்கு எப்படி இன்று சுதந்திர தினமோ, அதேபோல, இன்றைய தினம், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததன் ஆறாவது நினைவு நாளும் கூட என்பதால் ரஷ்யா உக்ரைன் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.
ஆகவே, ஏவுகணைத் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் தலைநகர் கீவ்வை விட்டு அவசரமாக வெளியேறிவருகிறார்கள்.
அதேநேரத்தில், அப்படி ரஷ்யா உக்ரைன் மீது இன்று தாக்குதல் நடத்தினால், அதற்கு பயங்கரமாக பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா எச்சரிப்பு
இந்நிலையில், புடினுக்கு நெருக்கமான நபர் ஒருவருடைய மகள் கொல்லப்பட்டதற்கு உக்ரைன்தான் காரணம் என ரஷ்யா கூறியிருக்கும் நிலையில், உக்ரைன் அரசு அலுவலகங்கள் மீது ரஷ்யா வரும் நாட்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என நேற்றைய தினம் அமெரிக்கா எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
Zelensky August 23rd
— Eng yanyong (@EngYanyong) August 24, 2022
1/ "I am grateful to everyone who defends true values. I am grateful to everyone who helps Ukraine. I am grateful to everyone who, since February 24, has chosen the path of struggle for what makes life real: for freedom, for independence. pic.twitter.com/aTEVDhPFqA

