நாட்டு மக்கள் பட்டினி - சுதந்திர தினக் கொண்டாட்டம் தேவையா - ஆதங்கத்தை அள்ளிக்கொட்டும் தென்பகுதி மக்கள் (காணொளி)!
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளது, அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக அரசதரப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடருகின்ற சூழ்நிலையில், சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில், மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
மக்கள் கருத்து
சுதந்திர தினத்திற்காக செலவழிக்கும் பணத்தை வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பயன்படுத்தலாம்.
நாடு இருக்கும் மோசமான சூழ்நிலையில், பணத்தை அழிக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டம் தேவையில்லை என மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்