சீனாவின் கைப்பிள்ளையான மாலைதீவு! உதவிக்கரம் நீட்டும் இந்தியா
மாலைதீவின் உணவு பற்றாக்குறையை தீர்க்க இந்திய அரசு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலைதீவு முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டதோடு சீனா ஆதரவாளராகவும் இருந்து வந்தார் இவர் தனது தேர்தல் பிரசாரத்திலேயே தான் வென்றால் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றுவேன் என்று கூறி பிரசாரம் செய்து வாகை சூடினார்.
அதேபோல் வெற்றி பெற்ற அவர் அங்குள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேறும்படி கூறினார். இது விவாதத்தை கிளப்பியது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சதீவுக்கு சென்று புகைப்படம் வெளியிட்டார்.
மாலைதீவின் சுற்றுலா துறை
மாலைதீவின் சுற்றுலா துறையை முடக்கும் வகையில் உள்நோக்கத்துடன் லட்சத்தீவை பிரதமர் மோடி ஆதரிப்பதாக அந்நாட்டு அமைச்சர்கள் கூறியதோடு இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளையும் தெரிவித்தனர்.
இது இந்தியா-மாலைதீவு இடையேயான பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தியது. இதனால் கடும் கோபமடைந்த இந்தியர்கள் மாலைதீவு செல்வதற்கான டிக்கெட்டுகளை இரத்து செய்தனர்.
இதனால், மாலைதீவு சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.
உதவி கோரியுள்ள மாலைதீவு
மேலும்,மாலைதீவில் இருந்த இந்திய இராணுவ வீரர்களை அந்நாடு அதிரடியாக வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் உணவுப்பொருட்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
தற்போது மாலைதீவில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் இந்தியாவிடம் உதவி கோரியுள்ள நிலையில் மாலைதீவுக்கு உதவிட இந்தியா முன்வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அரிசி, கோதுமை, சர்க்கரை, உருளைக்கிழங்கு, வெங்காயம், முட்டை ஆகியவற்றை டொன் கணக்கில் மாலைதீவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது.
உதவ முன்வந்துள்ள இந்தியா
அதிலும், நடைமுறையில் உள்ள எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் எற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
அதன்படி நடப்பு நிதியாண்டில் 124,218 மெட்ரிக் டொன் அரிசி, 109,162 டொன் கோதுமை மாவு, 64,494 டன் சர்க்கரை, 21,513 டொன் உருளைக்கிழங்கு, 35,749 டொன் வெங்காயம், 427.5 டொன் முட்டை, 1 மில்லியன் டொன் ஆற்று மணல் ஆகியவற்றை மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |