ஐந்தாண்டுகளுக்குப் பின் இந்தியா-சீனா உறவில் புதிய முயற்சி
இந்தியாவும் (India) சீனாவும் (China) ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் உறவுகளை புதுப்பிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.
இதன் ஒருக்கட்டமாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீனாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சன் வெய்டோங்கைச் சந்தித்துள்ளார்.
அத்தோடு, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நேரடி வானூர்தி சேவைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
சுற்றுலா விசா
இதனுடன், சீன நாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பீய் ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
இது, இரண்டு நாட்டு மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை மேம்படுத்தும் என்றும், இந்த விடயத்தில் சீனா இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது என்றும் சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சீனா கடந்த ஏழு மாதங்களில் சுமார் 80ஆயிரம் இந்தியர்களுக்கு சுற்றுலா விசாவை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
2020 ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த இராணுவ மோதல்களில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவும் சீனாவும் பரஸ்பர விசாக்களை நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
