இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற தவறிய கனடா: அதிருப்தியில் இந்தியா
கனடாவிடம் இந்தியா ஐந்து காலிஸ்தான் குழுக்களையும் தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளநிலையில் கனடா இரு குழுக்களையே தடை செய்துள்ளது, இதனால் இந்தியா பெரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கனடாவில் பாபர் குர்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு ஆகிய இரண்டு காலிஸ்தான் அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கனடா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பாவில் சுமார் 11 காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரச்சனை
ஜூன் 18ஆம் திகதி காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிறகு, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூதரக உறவுகளில் பாரிய விரிசல் ஏற்பட்டது.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,
“கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர பிரச்சினைகளை இரு தரப்பினரும் இணைந்து தீர்க்க வேண்டும் எனினும், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறை மீதான கனேடிய அரசின் அணுகுமுறையே முக்கியபிரச்சனை” என்று கூறியுள்ளார்.