அமேசானில் செத்து மிதக்கும் டொல்பீன்கள் : காரணம் என்ன..!
அமேசான் காடுகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையின் காரணமாக டொல்பீன்கள் இறந்து வருகின்றன.
வடக்கு பிரேசிலில் அமேசோனாஸ் (Amazonas) மாநிலத்தின் தலைநகரமான மனோஸ் (Manaus) நகருக்கருகே உள்ள டெஃப் (Tefe) பிராந்தியத்திலும் அமேசான் காடுகள் காணப்படுகின்றன.
இப்பகுதிகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் கடும் வெப்பத்தினால், டெஃப் ஏரியில் காணப்படும் நூற்றுக்கணக்கான டொல்பீன்கள் இறந்து மிதக்கும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பிற்கான காரணம் என்ன?
இப்பகுதிகளில் நீர் நிலைகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதோடு, ஒரு சில இடங்களில் வெப்பம் 102 பாகை பரனைடாக காணப்படுகின்றது.
இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் நடந்திராத போதிலும் கூட அதிகரித்த வெப்பநிலையே அதற்கான மூல காரணமென கண்டறியப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், வெப்பநிலை அதிகரிப்பிற்கான காரணத்தை இதுவரையிலும் கண்டறிய முடியவில்லையென பிரேசில் அறிவியல் துறையின் ஆதரவில் இயங்கும் மமிரவா நிறுவனம் (Mamiraua Institute) தெரிவித்துள்ளது.