வவுனியாவில் கோர விபத்து: பாடசாலை மாணவன் பலி
Vavuniya
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
வவுனியா புதுக்குளம் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(03) மதியம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து பாடசாலையிலிருந்து ஒருவர் தனது 7 வயது மகள் மற்றும் 9 வயதுடைய சிறுவனையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றபோதே ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
படுகாயம் அடைந்த சிறுவர்களை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஒன்பது வயதுடைய வி. டினோஜன் என்ற சிறுவனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்து மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததால் ஏற்பட்டதா அல்லது அதே திசையில் வந்த கனரக வாகனத்தில் மோதுண்டு ஏற்பட்டதா என ஈச்சங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.