மருத்துவரின் கவனக்குறைவால் பறிபோன சிறுமியின் உயிர் - அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
Football
Chennai
India
By Dharu
தவறான சிகிச்சையினால் இந்தியாவில் கால்பந்து வீராங்கனை ஒருவர் மரணமடைந்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயதுடைய கால்பந்து வீராங்கனையான பிரியாவிற்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்தினால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், “தமது மகளின் மரணத்துக்கு காரணமான மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும்”என்று அவரது தந்தை ரவிக்குமார் காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பணியிடை நீக்கம்

இந்நிலையில், மாணவிக்கு சிகிச்சையளித்த இரண்டு மருத்துவர்களையும் பணியிடை நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி