அதிகரிக்கும் இந்தியாவுடனான முறுகல்: எச்சரிக்கை விடுக்கும் சீனா
அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக இந்திய பிரதமர் மோடி அருணாசலப் பிரதேசத்திற்கு பயணித்ததற்கு சீனா கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என உரிமை கொண்டாடி வரும் சீனா, இப்பகுதிக்கு ‘ஸாங்னான்’ எனப் பெயர் சூட்டி அழைத்து வருகிறது.
அதேவேளை, இந்திய தலைவர்கள் இந்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு சீனா கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
தூதரக ரீதியிலான எதிர்ப்பு
சீனாவின் இந்த செயற்பாடுக்கு தொடர்ந்து கண்டனம் வெளியிட்டு வரும் இந்தியா, அப்பகுதி நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனாவிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப் பகுதிக்கு பிரதமர் மோடி விஜயம் மேற்கொண்டுள்ளதையடுத்து இந்தியாவுடன் தூதரக ரீதியிலான எதிர்ப்பையும் சீனா தெரிவித்துள்ளது.
எல்லைப் பிரச்சினை
அத்துடன், இந்தியாவின் இவ்வாறான செயற்பாடுகள் எல்லைப் பிரச்சினையை சிக்கலாக்கும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.
மேலும், ஸாங்னான் பகுதியை தன்னிச்சையாக மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை என்றும் சீனா-இந்தியா எல்லையின் கிழக்குப் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டதால் சீனா கடும் அதிருப்தியடைந்துள்ளது, இதை வன்மையாக எதிர்க்கிறது என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இன்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |