ட்ரம்பின் அழுத்தம்: எண்ணெய் வர்த்தகத்தில் பாரிய அடிவாங்கிய ரஷ்யா
ரஷ்ய (Russia) எண்ணெய் கொள்முதலை இந்தியாவும் (India) மற்றும் சீனாவும் (China) குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) வேண்டுகோளை ஏற்று இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் வர்த்தகம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரில் ரஷ்ய எண்ணெய்யை அதிகளவில் கொள்முதல் செய்து இந்தியாவும், சீனாவும் அந்நாட்டுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார்.

அத்தோடு, எச்சரிக்கையை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்காக இந்திய பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரியும் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.
இதனிடையே, கடந்த சில நாள்களாக ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து வருகின்றார்.
சர்வதேச ஊடகங்கள்
இந்தநிலையில், நேற்று (23) ஊடகவியலாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து தெரிவித்த அவர், “ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை சீனா குறைத்துள்ளதாக இன்று காலை சர்வதேச ஊடகங்களின் செய்திகளைப் பார்த்தேன்.
டொனால்ட் ட்ரம்ப்பின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவும் இதைச் செய்துள்ளது.
ரஷ்ய எண்ணெய்
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு நட்பு நாடுகளான ஐரோப்பிய நாடுகளுக்கும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் சந்திப்பு முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை.

மீண்டும் சந்திப்பு நடைபெறும் என்று டொனால்ட் ட்ரம்ப்பும் மற்றும் அமெரிக்க நிர்வாகமும் நம்புகின்றது.
அந்த சந்திப்பில், நேர்மறையான முடிவு இருப்பதை உறுதி செய்யவும் நாங்கள் விரும்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |