கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான்: மாலைதீவுக்கு உதவுவதாக உறுதி
கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் அண்டை நாடான பாகிஸ்தான், மாலைதீவிற்கு உதவுவதாக அறிவித்துள்ளது.
இந்தியா மாலைதீவு பிரச்சினையால் மாலைதீவுக்காக இந்தியா ஒதுக்கிய நிதியுதவியை குறைத்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.600 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
உதவ முன் வந்துள்ள பாகிஸ்தான்
இந்த நிலையில்,மாலைதீவின் வளர்ச்சிக்கு உதவ பாகிஸ்தான் அரசு முன் வந்துள்ளது.
மாலைதீவு அதிபர் முய்சுவுடன் பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வர்-உல் ஹக் கக்கர் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதன்போது மாலைதீவின் வளர்ச்சிக்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதாகவும், சுற்றுச்சூழல் மாற்றங்களின் சவால்களை எதிர்கொள்ள நாட்டிற்கு உதவுவேன் என்றும் கூறியுள்ளார்.
கடும் நிதி நெருக்கடி
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் சமீபத்தில் சீனாவிடம் 2 பில்லியன் டொலர் கடனாகக் கேட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் இந்த முடிவால் சில நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளதுடன் வங்ரோத்து நிலையில் உள்ள பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |