மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் : பா.ஜ.க முன்னிலை... மம்தா பானர்ஜி பின்னடைவு
மேற்கு வங்க சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக 159 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.
பபானிபூர் தொகுதியில் மம்தாவை பின்னுக்கு தள்ளி பாஜகவின் முதல்வர் முகம் சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளதுடன் நந்திகிராமிலும் சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார்.
பாஜக ஆட்சி அமைக்கும்
மேற்கு வங்கத்தில் பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போதைய நிலவரடி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில் மம்தா பானர்ஜி தலைமையிலான 14 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய திகதிகளில் 294 இடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு தொகுதி தவிர்த்து 293 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |