ஜெனிவாவில் இலங்கையை கண்டித்த இந்தியா-வெளியானது பின்னணி

United Nations Sri Lanka India OHCHR
By Jaso Sep 19, 2022 03:35 AM GMT
Report

இலங்கையை கண்டித்த இந்தியா

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில், இலங்கையை இந்தியா கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளநிலையில் அதற்கான பின்னணியை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இதன்படி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்தியதை அடுத்தே இந்தியா மேற்படி நிலைப்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனிவாவில் இலங்கையை கண்டித்த இந்தியா-வெளியானது பின்னணி | India External Condemnation Of Sri Lanka In Geneva

“ஈழத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதற்காக, இலங்கை அரசியலமைப்பில் செய்யப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துதல், மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரம், மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்துதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், எந்த முன்னேற்றத்தையும் இலங்கை அரசு எட்டவில்லை” என்று ஜெனீவாவில் கடந்த 12 ஆம் திகதி உரையாற்றிய இந்திய பிரதிநிதி குற்றம் சாட்டினார்.

“ஒருங்கிணைந்த இலங்கைக்குள், தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதே, இந்தியாவின் நிலைப்பாடு. இதை இலங்கை உறுதி செய்ய வேண்டும்” என்று, கண்டிப்புடன் இந்திய பிரதிநிதி குறிப்பிட்டிருந்தார்.

ஆச்சரியத்தில் ஆழ்த்திய கண்டிப்பு

மத்திய பா.ஜ.க, அரசாங்கத்தின் இந்த கண்டிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், இலங்கையை சீனா ஆதரிப்பதால் தான், இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

ஐ.நாவில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன.

ஜெனிவாவில் இலங்கையை கண்டித்த இந்தியா-வெளியானது பின்னணி | India External Condemnation Of Sri Lanka In Geneva

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி, இலங்கை பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, மே 1 இல் நுவரெலியாவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய மேதின தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், “ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியது போல, நானும், என் இரத்தத்தின் இரத்தமான இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன். இன்றைய இந்தியா மோடியின் வல்லரசு இந்தியா. இலங்கை மக்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது. உங்களின் துயரங்கள் அனைத்தும் விரைவில் விடுபடும்” என்றார்.

இலங்கை பயணம் குறித்த விரிவான அறிக்கை

இலங்கை பயணம் குறித்த விரிவான அறிக்கையை, அமித்ஷா, பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டாவிடம் அண்ணாமலை வழங்கியிருந்தார். இந்நிலையில், ஐ.நா பேரவையில் இலங்கை பற்றிய விவாதம் நடப்பதையொட்டி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசிக்குமாறு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூறியுள்ளனர்.

அதன்படி, தன்னிடம் ஆலோசித்த ஜெய்சங்கரிடம், “விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாத நிலையில், நாம் முழுமையாக தமிழர்கள் பக்கம் நிற்பது தான் சரியானது. இலங்கை தமிழர்கள் மோடியை தான் நம்பியுள்ளனர். எனவே, 13 ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல், மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தி அரசியல் அதிகாரம் வழங்குதல் போன்ற அடிப்படையான கோரிக்கைகளை, இந்தியா வலியுறுத்த வேண்டும். இதைத் தான் தமிழக மக்களும் விரும்புகின்றனர்” என அண்ணாமலை கூறியுள்ளார்.

ஜெனிவாவில் இலங்கையை கண்டித்த இந்தியா-வெளியானது பின்னணி | India External Condemnation Of Sri Lanka In Geneva

அதைத் தொடர்ந்தே, “கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை” என ஐ.நாவில் கண்டித்ததுடன், “இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், சமநீதி, சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்” என இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026