பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு
பாகிஸ்தானுக்கான விமான சேவை தொடர்பில் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் இந்தியக் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக கடந்த (புதன்கிழமை) அதிகாலை பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர்
மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தி இராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[BWIVS8Y ]
உச்சக்கட்ட போர் பதற்றம்
இருநாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், இன்று (08.05.2025) காலையில் பாகிஸ்தானின் லாகூரில் பலத்த வெடிச்சத்தங்கள் மற்றும் சைரன்கள் கேட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் பாகிஸ்தான் லாகூர் வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கோபால் நகர் மற்றும் நசீராபாத் பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அங்கு பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியுள்ளதுடன், அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தான் லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
