முதல் பழங்குடியின பெண் -இந்தியாவின் அதிபராகிறார்
BJP
Delhi
India
By Sumithiran
இந்தியாவின் முதல் பழங்குடி இன பெண்
இந்தியாவின் முதல் பழங்குடி இன பெண் திரௌபதி முர்மு இந்தியாவின்15 ஆவது அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 18 ஆம் திகதி இடம்பெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியான நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு 5,77,777 வாக்குகளையும்,யஷ்வந்த் சின்ஹா 2,61,062 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பல்வேறு தரப்பினரும் வாழ்த்து
இதன்மூலம் அதிகூடிய வாக்குகளை பெற்று திரெளபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து திரௌபதி முர்முவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அதிபராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில்,திரௌபதி முர்மு புதிய குடியரசு தலைவராக பதவியேற்கவுள்ளார்.
