இந்திய மீனவர்கள் அத்துமீறல் - வன்முறையை கையில் எடுக்க வேண்டி வரும் : தாயக மீனவர்கள்!
முல்லைத்தீவில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் அட்டாகாசம் அதிகரித்துள்ளதாகவும் கட்டுப்படுத்த தவறின் வன்முறை வெடிக்கும் எனவும் முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(10) ஒருமணியளவில் முல்லைத்தீவு மாவட்ட மீனவ சம்மேளனத் தலைவர் வி. அருள்நாதன் மற்றும் வண்ணாங்குளம் கடற்தொழில் அமைப்பின் தலைவர் வே.சிவகுமார் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து கருத்து தெரிவித்தபோதே குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்திய மீனவர்கள் அத்துமீறல்

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,
"நேற்று முல்லைத்தீவு கடலில் இந்தியாவின் இழுவைப்படகுகள் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள், இது தொடர்பில் கடற்படைக்கும் நீரியல் வளத்திணைக்களத்திற்கும் தெரியப்படுத்திய போதும் கடற்படையினர் வருவதாக சொன்னார்கள் ஆனால் எந்த விதமான படகும் வரவில்லை, துரத்துவதாக சொன்னார்கள் ஆனால் இல்லை.
நேற்று இரவு மாவட்டத்தில் இருந்து தொழிலுக்கு சென்ற படகுகள் அனைத்தும் கரையினை வந்துள்ளார்கள்.
காரணம் இந்திய இழுவைப்படகுகள் வலைபடுப்பதற்கு முடியாத நிலையில் படகினை இழுத்துக்கொண்டு வந்துள்ளார்கள்.
இந்திய இழுவைப்படகினால் தூண்டில் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று 5 பேரின் தூண்டில் தொழில் அழிவடைந்துள்ளதாக, கரை வந்து பிள்ளைகளுடன் அழுகின்றனர்.
அதிபரிடம் நாங்கள் கோரி நிக்கின்றோம் கடற்படையினர் ஏன் எல்லை தாண்டி வுருவதற்கு அனுமதிக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கில் மட்டும் இவ்வாறான நிலை, இன்று தீவு பகுதிகளிலும் நிறைய இந்திய இழுவை படகு வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
வன்முறையினை கையில் எடுக்கவேண்டி வரும்

கடற்படையின் அதிகாரிகள், பாதுகாப்பு செயலாளர்கள் நல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையெனில் வன்முறையினை கையில் எடுக்கவேண்டி வரும்.
இந்திய இழுவைப்படகினால் எங்கள் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்படுகின்றது.
இந்தியா எமக்கு நிதியினை கொடுப்பது மட்டுமல்லாமல், எங்களின் படகுகளை உங்கள் எல்லையில் வைத்து இங்கு வராமல் தடுக்கவேண்டும்.
இல்லையேல் வடக்கு கிழக்கில் இருக்கும் மீனவர்கள் கடலில் இறங்கி கடுமையான வன்முறையினை சந்திக்க வேண்டிவரும்.
பொருளாதார நெருக்கடியான நிலையில் கடன் எடுத்து தொழில் செய்கின்றார்கள், அந்த வலைகளை இந்திய இழுவைப்படகு நாசம் செய்கின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகளை கொடுப்பதற்குகூட அரசிடம் பணம் இல்லை, அவர்கள் அடுத்த கட்டம் மருந்துகளை குடித்து சாகவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்." என தெரிவித்தார்.