இந்திய மீனவர்களை அனுமதித்தால் வெடிக்கும் பாரிய போராட்டம் - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
india
fisherman
By Vasanth
இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் கடற்றொழிலுக்காக அனுமதிக்கும் பட்சத்தில், பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மீனவ சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அனைத்து இலங்கை பொது மீனவ சம்மேளனத்தின் தலைவர் ரத்ன கமகே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிப் பத்திர நடைமுறையொன்றை அமுல்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
இந்திய மீனவர்கள் நாட்டுப்படகுடன் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்தால் அவர்களை பதிந்துவிட்டு அனுமதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்