முடக்கப்படவுள்ள பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதி : இந்தியாவின் அதிரடி ஆட்டம்
பாகிஸ்தானுக்கு (Pakistan) உலகளாவிய நிறுவனங்கள் அளிக்கும் நிதியுதவியை மறுபரிசீலனை செய்ய இந்தியா (India) கோரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படவிருக்கும் நிதி மற்றும் கடன்களை மறுபரிசீலனை செய்ய சர்வதேச நாணய நிதியம் உள்பட உலகளாவிய நிதி நிறுவனங்களிடம் இந்தியா கோரிக்கை விடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானுக்கு பொதுத்துறை கடன்கள், மானியங்கள், தொழில்நுட்ப உதவிகள் என மொத்தம் 43.4 பில்லியன் டொலர்களை வழங்கிய ஆசிய மேம்பாட்டு வங்கியிடமும், காலநிலை பின்னடைவு கடன் திட்டத்தின்கீழ், 1.3 பில்லியன் டொலர் அளிக்கும் சர்வதேச நாணய நிதியத்திடமும் மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பகுதி
அத்தோடு, பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க 320 மில்லியன் டொலர் வழங்கவும் ஆசிய மேம்பாட்டு வங்கி உறுதியளித்திருந்தது.
இந்த நிதியுதவி குறித்தும், பாகிஸ்தானுக்காக 20 பில்லியன் டொலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் குறித்தும் மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரிக்கை விடலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
