இலங்கையை மீட்டெடுத்த நாடுகள்! பெருமை கொள்ளும் அமெரிக்கா
இந்தியா போன்ற கூட்டாளி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா முன்னெடுத்த இந்தோ பசுபிக் மூலோபாயம் வெற்றி பெற்றுள்ளமைக்கான உதாரணம் இலங்கை என அமெரிக்காவின் தென்னாசியா மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.
ஒன்றரை வருடகாலத்திற்கு முன்னர் இலங்கை நெருக்கடியில் சிக்குண்டிருந்தது, வீதியில் பெரும் கலவரங்கள் ஏற்பட்டன, பெட்ரோல் மற்றும் உணவிற்காக மக்கள் வீதிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர், அதிபரின் இல்லம் கைப்பற்றப்பட்டது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரின் நீச்சல்தடாகத்தில் நீந்தினர் என அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்
சர்வதேச நாணயநிதியத்தின் நிதி
“ஆனால் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்தீர்கள் என்றால் தற்போது முற்றிலும் வித்தியாசமான இடமாக காணப்படுகின்றது.
இலங்கையின் நாணயம் ஸ்திரமான நிலையில் காணப்படுவதுடன் பொருட்கள், எரிபொருட்களின் விலைகள் ஸ்திரமானதாக காணப்படுகின்றன.
கடன் மறுசீரமைப்பு குறித்த உத்தரவாதங்கள் அவர்களிற்கு கிடைத்துள்ளன. சர்வதேச நாணயநிதியத்தின் நிதி கிடைக்கின்றது.
இது எப்படி நடந்தது ? நண்பர்களின் சிறிய உதவியுடனேயே இது சாத்தியமானது என தெரிவித்துள்ள அவர் அமெரிக்காவும் அதன் சகாக்களும் சிறந்த திட்டங்களை முன்வைப்பார்கள் என்பதை அடிப்படையாக கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யுஎஸ்எயிட் வழங்டகிய டொலர்
இலங்கையைப் பொறுத்தவரை நெருக்கடியின் ஆரம்பத்தில் அந்த நாட்டிற்கு என்ன தேவைப்பட்டது என்றால் மனிதாபிமான உதவி தான்.
இந்தியா போன்ற நாடுகள் சலுகை கடன்களை வழங்குவதை நாங்கள் பார்த்தோம், இவை இலங்கை மிகவும் நெருக்கடியான தருணத்தில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள உதவியது.
யுஎஸ்எயிட் இந்த நெருக்கடியான தருணத்தில் விவசாய உற்பத்திக்கான பொருட்களிற்காக மில்லியன் டொலர்களை வழங்கியது.
சீனாவின் திட்டம்
கடனைப் பொறுத்தவரை ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் தலைமையிலான நாடுகள் இலங்கை தனது கடன்மறுசீரமைப்பை பேண்தகுமுறையில் முன்னெடுப்பதற்கு அனுமதிப்பதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் பல மாதங்கள் ஈடுபட்டன.
சீனாவின் இந்த திட்டம் கடன் உத்தரவாதங்களுடன் இணங்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிவருகைக்கான சூழ்நிலையை உருவாக்கியது.
மேலும் இதுவே இன்று இலங்கையின் பொருளாதாரத்தில் நீங்கள் காணும் மாற்றங்களை ஏற்படுத்தியது” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |