இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட இந்தியாவிற்கு உரிமையில்லை- சரத்வீரசேகர கொந்தளிப்பு

13th amendment Sarath Weerasekara Sri Lanka India
By Sumithiran Jan 31, 2023 11:36 PM GMT
Report

பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆணை இல்லை எனவும், அவ்வாறு அதனை அவர் நடைமுறைப்படுத்த  69 இலட்சம் மக்கள் ஆணை வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினர் அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்து மகாநாயக்கர் உட்பட சங்க சபைக்கு தெரிவித்துள்ளனர்.

அஸ்கிரி பீடத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை. இன்றையதினம் (31ஆம் திகதி)  நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், சுதத் குணசேகர, கல்யாண திரணகம, வசந்த பண்டார, கலாநிதி கபில குணவர்தன உள்ளிட்டோர் சந்தித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

 ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆணை இல்லை

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட இந்தியாவிற்கு உரிமையில்லை- சரத்வீரசேகர கொந்தளிப்பு | India Has No Right To Interfere In Sri Lanka

“நிறைவேற்று அதிபரை மக்களே நியமிக்க வேண்டும் என அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால் இந்த அதிபர், எம்.பி.க்களால் நியமிக்கப்பட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்சவுக்கு அதிபராக வருவதற்கு வாக்களித்த அறுபத்து ஒன்பது இலட்சம் மக்களின் அபிலாஷையானது, நாட்டின் ஒற்றுமையை பிளவுபடாமல் பேணிக்காப்பதாகும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு உரிமை இல்லை

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட இந்தியாவிற்கு உரிமையில்லை- சரத்வீரசேகர கொந்தளிப்பு | India Has No Right To Interfere In Sri Lanka

எமது உள் அரசியலில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை. பதின்மூன்றாவது திருத்தம் இந்தியாவால் நம்மீது கட்டாயப்படுத்தப்பட்டது. அது மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றுபட்ட நமது நாட்டை ஒன்பது துண்டுகளாக உடைத்தது. ஜே.ஆர்.ஜெயவர்தன கூட சில தடைகளுடன் 13ஐ நடைமுறைப்படுத்தினார். காணி அதிகாரங்கள், காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. முதலமைச்சருக்கு மேல் மத்திய அரசின் சார்பில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

13ஐ வைத்து முழுமையாகக் கூட்டாட்சி

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட இந்தியாவிற்கு உரிமையில்லை- சரத்வீரசேகர கொந்தளிப்பு | India Has No Right To Interfere In Sri Lanka

நாட்டின் ஒற்றுமையைக் காக்க ஏராளமானோர் உயிர் தியாகம் செய்துள்ளனர். மேலும் பலர் ஊனமுற்றுள்ளனர். இப்படிப் பாதுகாக்கப்பட்ட நாடு முழுவதுமாக 13ஐ வைத்து முழுமையாகக் கூட்டாட்சியாக்க அனுமதிக்கப்படுமா என்ற கேள்வியைக் கேட்க வேண்டும்.

ஐம்பது வீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொழும்பில்  சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுடன் வாழ்கின்றனர். இதனை தமிழ் மக்கள் விரும்பவில்லை. பிரிவினைவாத சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இது தேவையாக உள்ளது. எமது மாகாணங்கள் இன ரீதியாக பிரிக்கப்படக் கூடாது என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018