பலாலி காணிகள் விடுவிப்பு பதறுகிறார் சரத்வீரசேகர
சிறிலங்கா படையினரால் சுமார் முப்பது தசாப்தங்களுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் பலாலியைச் சூழவுள்ள காணிகளை மீளவும் மக்களிடமே ஒப்படைப்பதற்கு முன்னாள் பொதுபாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி இந்த காணிகளை விடுவிப்பதற்கு முன்னர் படைத்தரப்பிடம் ஆலோசனை பெறவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
படைத் தளபதிகளிடம் ஆலோசனை
பலாலியைச் சூழவுள்ள காணிகளை விடுப்பதற்கு முன்னர் பாதுகாப்புப் படைத் தளபதிகளிடம் ஆலோசனை பெறுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அபாயகரமான செயற்பாடு
அவ்வாறு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாமல் குறித்த பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்