இலங்கைக்கு எந்த தேவை வந்தாலும் உதவ தயார்!! இந்திய தூதுவர் உறுதி
இலங்கைக்கு எந்த தேவைகள் வந்தாலும் அதனை பூர்த்தி செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்ததாக இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமையன்று (7) மாலை இந்திய தமிழக அரசின் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு திட்டம்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "அரிசி பால்மா என்றில்லாமல் எரிபொருள்,மருந்துப் பொருட்க்கள் என பலதரப்பட்ட நிவாரண சேவைகளை செய்துகொண்டு வருகின்றோம்.
நீண்டகாலத்தில் முதலீடு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதுதான் அடுத்தகாலத்திட்டம் பொருளாதார மேம்பாட்டுக்காவும் தொடர்ந்து செயற்படப்போகின்றோம்", எனக் குறிப்பிட்டார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்