இந்தியாவின் 77வது சுதந்திர தினம் - யாழ்ப்பாணத்தில் கொடியேற்றம்(படங்கள்)
India
By pavan
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று(15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார்.
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.
சுதந்திர தினம்

இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீர்த்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவுக்கல் ஒன்றையும் துணைத்தூதுவர் திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந் நிகழ்வில் மதத்தலைவர்கள் தூதரக அதிகாரிகள் பணியாளர்கள் கல்வியலாளர்கள. பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



5ம் ஆண்டு நினைவஞ்சலி