உச்சக்கட்ட பதற்றம்...! பாகிஸ்தானை தாக்கிய இந்திய ஏவுகணைகள்
பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது "துல்லியமான தாக்குதல்" நடத்தியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானில் உள்ள மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஒரு ஏவுகணை பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் உள்ள பழைய விமான நிலையத்தை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் (Pahalgam) தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஷ்யாவுக்கான பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுவர் காலித் ஜமாலி தெரிவித்திருந்தார்.
இந்தியாவால் அவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட்டால் அணு ஆயுதங்கள் உட்பட முழு இராணுவ ஆயுதங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்த நேரிடும் என அவர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளமையானது பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலையை உருவாகியுள்ளது.
You May like this
