பண கஷ்டத்தில் வாடிய மீன் வியாபாரிக்கு அடித்த அதிர்ஷ்டம்..! லொட்டரியால் கிடைத்த மகிழ்ச்சி வாழ்க்கை
இந்தியாவில் மீன் விற்க சென்ற நபருக்கு லொட்டரியில் ஒரேநாளில் ஒரு கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்து கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
தமிழகத்தில் லொட்டரி விற்பனைக்கு தடை செய்யப்பட்ட நிலையில், கேரள மாநிலத்தில் லொட்டரி சீட்டுகள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அப்போது, சிலருக்கு மட்டுமே கோடிகளிலும், லட்சங்களிலும் அதிர்ஷ்டம் அடிக்கும். அப்படி ஒருவருக்கு தான் கேரளாவில் அடித்துள்ளது.
லொட்டரி சீட்டுகள்
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட திருவழியோடு பகுதியைச் சேர்ந்தவர் மஜீத். இவர் மீன் வியாபாரி ஆவார்.
இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லொட்டரி சீட்டுகள் வாங்கி வந்துள்ளார். ஆனால், அவருக்கு எந்தவொரு பரிசும் விழுந்ததில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நென்மாரா பகுதிக்கு மீன் விற்க சென்றிருந்தார். அங்கு, செந்தாமரை என்பவர் லொட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
1கோடி பரிசுத்தொகை
அவரிடம் இருந்து 5 லொட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளார். அப்போது அவர் கையில் பணம் இல்லாததால் முன்பணமாக ரூ.10 மட்டும் கொடுத்துள்ளார். மீதியுள்ள பணத்தை மீன் விற்று ரூ.240 ஐ கொடுத்துள்ளார்.
இந்நிலையில், லொட்டரி சீட்டுக்கான முடிவுகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் மீன் வியாபாரி மஜீத் வாங்கியிருந்த லொட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், அவர் வாங்கியிருந்த மற்ற 4 லொட்டரி சீட்டுகளுக்கும் தலா ரூ.8 ஆயிரம் பரிசு விழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |