கச்சதீவை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை
கச்சதீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை
கச்சதீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று திருச்சியில் வைத்து மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் வீ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் அதவத்தூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன தினம் மற்றும் வாழை வயல் தின விழாவில் இணை அமைச்சர் முரளிதரன் இன்று பங்கேற்றிருந்தார்.
இதற்கு முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கச்சதீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார்.
தமிழக மக்களின் ஆதரவு
ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருவதன் காரணமாக தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர போராட்டத்தில் சாவர்க்கர் ஈடுபடவில்லையென தமிழகத்தில் மாத்திரமே கூறப்படுகின்றது எனவும் தமிழக மக்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிகரித்து வருகிறது எனவும் மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீன உளவுக் கப்பல்
தேசிய பாதுகாப்புக் கருதி இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக் கப்பலை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது எனவும் மத்திய இணையமைச்சர் முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
