இந்திய ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி
india
narendra modi
By Vasanth
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, பரிசோதனைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள், வைத்திய கண்காணிப்பில் அவர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து அவரது மகனிடம் தொடர்பு கொண்டு பேசியதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.