24 மணிநேரத்தில் புரட்டிப் போட்ட சீரற்ற காலநிலை - 6 பேர் பலி

Weather Floods In Sri Lanka Rain Flood
By Thulsi Aug 04, 2026 01:56 AM GMT
Report

சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா, ஹட்டன், கினிகத்ஹேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் காணாமல்போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மோசமான வானிலை

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஆண் ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழைவீழ்ச்சியா ல் ஏற்பட்ட இந்த மண்சரிவுச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

24 மணிநேரத்தில் புரட்டிப் போட்ட சீரற்ற காலநிலை - 6 பேர் பலி | Advisory Issued Heavy Rain In Several Districts

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 581 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி - சோலங்கந்தை பகுதியில் நேற்று மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வர்த்தக நிலையமொன்று சேதமடைந்துள்ளதுடன், 65 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த மேற்படி நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

பாடசாலை விடுமுறை

அத்துடன் நேற்று மாலை வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஞானானந்தகம வீதியில் மகாவலி கங்கையின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மகாவலி கங்கையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

24 மணிநேரத்தில் புரட்டிப் போட்ட சீரற்ற காலநிலை - 6 பேர் பலி | Advisory Issued Heavy Rain In Several Districts

தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்த தகவல்கள், நிலவும் வானிலை நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இன்று மதியம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவசர இடர் நிலைமைகள் ஏதேனும் ஏற்படின், இடர்முகாமைத்துவ மையத்தின் அவசர உதவி இலக்கமான 117 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு 117 எண்ணை அழைக்கவும்! இடர்முகாமைத்துவ மையம் அவசர அறிவிப்பு

அவசர உதவிக்கு 117 எண்ணை அழைக்கவும்! இடர்முகாமைத்துவ மையம் அவசர அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்