கண்டி - கொழும்பு வீதியில் பயணிப்பவர்களுக்கு முக்கிய தகவல்
கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று (04.08.2026) காலை 6.00 மணிக்கு வீதி திறக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று (03) நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுன்னாவ பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டது.
சீரற்ற வானிலை
இதன் காரணமாக கணேதென்ன மற்றும் கடுன்னாவ இடையிலான வீதிப் பகுதியை தற்காலிகமாக மூட காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதன்பின்னர் வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இன்று காலை 6.00 மணி முதல் அந்த வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.