இந்தியாவை கண்டு நடுநடுங்கும் சீனா..! ஒற்றை வார்த்தைக்கு இத்தனை சக்தியா...
இந்தியாவின் வலிமையையும் உலக நாடுகளிடையே இந்தியாவிற்கு இருக்கும் செல்வாக்கையும் கண்டு சீனா அச்சம் கொண்டிருப்பதான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சமீப காலமாக இந்திய இராணுவத்தின் சில திட்டமிட்ட நகர்வுகள் சீனாவை திடுக்கிடச் செய்துள்ளது. இதனால் பல முக்கியமான எல்லைப்பகுதிகளில் இந்தியா இராணுவ ரீதியான நன்மைகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்திய இராணுவ வீரர்களின் ஜெய் ஹிந்த் என்ற கோஷம் சீன இராணுவத்தினரை மட்டுமல்ல சில சீன கைக்கூலிகளையும் நடுக்கமுறச் செய்துள்ளதாக போரியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது சாத்தியமானது எப்படி
உலகின் பெரும் போர்கள் அனைத்திலும் டிஸப்ஷன் எனப்படும் தந்திரம் அல்லது மோசடி முக்கிய பங்கு வகிக்கும். இந்த டிசப்ஷனில் முக்கிய பங்கே எதிரிக்கு நமது உண்மையான பலத்தை மறைத்து நாம் பலவீனமானவர்கள் என்ற எண்ணத்தில் அவன் தாக்க முற்படும்போது எதிர்பாராத விதமாக நம் பலத்தை வெளிப்படுத்தி அவர்களை திக்குமுக்காட வைப்பது.
இதைத்தான் லடாக்கின் பாங்காங் ஸோ ஏரி பகுதியிலும் கைலாஷ் மலை தொடரிலும் இந்திய இராணுவம் அதிரடியாக செய்து காட்டியது.
ஒரு சில முக்கிய மலைத்தொடர்களையும் ரோந்துப்பகுதிகளையும் கைப்பற்றியதன் மூலம் சீனாவுக்கு ஒரு நம்பமுடியாத அதிர்ச்சியை தந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்திய இராணுவத்தின் பவர் பன்ச்.
இந்திய சீன எல்லை பெரும்பாலும் மலைமுகடுகளால் சூழப்பட்டது. உயரமான இந்திய மலை பகுதியில் நவீன யுக்திகளோடு அமைக்கப்பட்டிருக்கும் இந்திய இராணுவ நிலைகளையும் பங்கர்களையும் கைப்பற்ற (ஒவ்வொரு இந்திய வீரருக்கும்) ஐந்து முதல் எட்டு சீன வீரர்களை பலி கொடுக்க வேண்டியிருக்கும். இந்தியாவிற்கு சாதகமான எல்லைப்புற நிலப்பரப்பு அப்படிப்பட்டது.
இந்திய - சீன போர்
1962 இந்திய சீன போரின் போது காரகோரம் மலைத்தொடரிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தவுலத் பெக் ஓல்டி என்ற மிக கடினமான பகுதியை இந்திய இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அது அப்போது யாருக்கு என வரையறுக்கப் படாத அன்மார்க்ட் டெரிடரி.
அங்கு இந்தியா ஏறக்குறைய 60 எல்லை சாவடிகளை ஏற்படுத்தி ஒவ்வொரு எல்லைச்சாவடியிலும் 10 முதல் 15 வீரர்களை நிறுத்தியது. ஆனால் சீனாவோ அங்கு இந்தியாவிற்கு எதிராக கிட்டத்தட்ட 300 எல்லைச்சாவடிகளை அமைத்து, ஒவ்வொரு எல்லைச்சாவடியிலும் நூறிலிருந்து முன்னூறு வீரர்களை நிறுத்தி இருந்தது.
ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. 1962 இல் நடந்ததை போல சீன தரைப்படைகளால் எல்லையில் இப்போது வெற்றி பெற முடியாது. இந்திய இராணுவம் பல ஆண்டுகளாக போர் அனுபவமும் பல போர்களை வென்ற அனுபவம் பெற்ற இராணுவமாகவும் ஒரு ஸீஸன்ட் யுத்த இயந்திரமாக உருவெடுத்துள்ளது.
ஆனால் சீன இராணுவம் போர்முனைகளில் அதிகமாக பயன்படுத்தப்படாத ஒரு இராணுவம். டின்னமென் சதுக்க போராட்டத்தை அடக்குவது போல உள்நாட்டில் அடக்குமுறை புரியவே அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் சீன இராணுவமே எண்ணிக்கையில் அதிக துருப்புக்களைக் கொண்ட இராணுவம் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட பொய். சீனாவின் இராணுவ துருப்புக்கள் எண்ணிக்கை சுமார் 23 லட்சம் எனவும் இந்தியாவின் துருப்புக்கள் எண்ணிக்கை 13 லட்சம் எனவும் ஒரு கணக்கு சொல்லுகிறார்கள்.
அதேபோல சீனாவில் 14 லட்சம் ரிசர்வ் வீரர்கள் இருப்பதாக கூறுகிறார்கள் . இந்தியாவில் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 28 லட்சம் ரிசர்வ் படையினரும் துணை இராணுவப்படைகளும் உள்ளனர் என்றும் கணக்கிடுகிறார்கள்.
இந்த கணக்குப்படியே ஃபயர் பவர் என்று வரும்போது இந்தியாவில் 41 லட்சம் எண்ணிக்கையில் போர்முனைகளுக்கு செல்ல ஆயத்தமாக உள்ளனர். சீனாவில் சண்டையிடக்கூடிய ஆட்களின் எண்ணிக்கை 37 லட்சம் பேர் தான். இந்தியாவை ஒட்டிய சீன எல்லை பகுதியில் இரண்டு முதல் இரண்டரை லட்சம் சீன வீரர்களே உள்ளனர்.
அவர்களது மீதி படைகள் ஜின்ஜியாங் மற்றும் திபெத் பகுதியில் உள்ள எதிர்ப்பை அடக்கவும் மற்றும் ரஷ்ய எல்லையிலும் இன்னொரு பக்கத்தில் தைவான் அமெரிக்க கூட்டணியை சமாளிக்கவும் இன்னொரு பக்கம் ஜப்பானை தடுக்கவும் லட்சக்கணக்கான சீன வீரர்கள் பணியில் உள்ளார்கள். அவர்களை அங்கிருந்து காலி செய்து இந்தியாவுடனான போர்முனைக்கு கொண்டு வர இயலாது.
பேரழிவு கவசம்
இந்தியாவின் பெரிய பலம் த ஆர்மர் ஷீல்ட் ஒஃப் ஃபியூரி (The Armour Shield of fury). அதாவது தமிழில் பெருங்கோபத்தின் அல்லது பேரழிவு கவசம் என்று சொல்லலாம். நவீன போர்க்கள இலக்கணமே ஆர்டிலரி கான்குயர்ஸ் பட் இன்ஃபான்ட்ரி ஆக்கிபைஸ் (Though Artillery conquers it is the infantry that occupies). அதாவது பீரங்கிகள் வெற்றிகளை தரலாம். ஆனால் வெற்றி பெற்ற இடத்தில் நிலத்தை காலாட்படையால் தான் ஆக்கிரமிக்க முடியும். இந்தியாவின் பீரங்கி படைப்பிரிவு சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்பட வேண்டிய போர்ப்படை பிரிவாகும்.
1971 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தானிய போரில் Battle of Basantar எனப்படும் பசந்தர் சண்டை தான் இந்திய துணைக்கண்டத்திலேயே இதுகாறும் நடைபெற்ற மிகப்பெரிய பீரங்கி சண்டை. அந்த சண்டையில் இந்தியாவின் ஒற்றை பீரங்கி படைப்பிரிவு பாகிஸ்தானின் மிகப்பெரிய பீரங்கி படையையே முற்றிலுமாக துடைத்தெறிந்து அழித்தது.
பேப்பரில் வேண்டுமானால் சீனாவின் பீரங்கிப் படை இந்தியாவை விட வலிமை வாய்ந்ததாக கட்டமைக்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
இந்தியாவின் சுமார் 4500 பீரங்கிகளை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 6500 பீரங்கிகள் சீனாவிடம் இருந்தாலும் இந்தியாவின் பீரங்கிகள் அதிக சக்தி வாய்ந்தவை. போர்முனையில் வெகு தூரத்திலேயே எதிரிகளை சிதறடிக்கும் சக்தி கொண்டவை. அதிக நாசத்தை விளைவிப்பவை. இந்தியாவில் கிட்டத்தட்ட 6700 ஆர்மர்ட் கொம்பாட் வாகனங்கள் (Armoured Combat Vehicles) இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சீனாவிடம் 4700 ஆர்மர்ட் கொம்பாட் வாகனங்கள் தான் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
அதே போல இந்தியாவிடம் 7400 ஆர்டிலரி பீசஸ் (Artilery pieces) இருப்பதாக கூறப்படுகிறது . ஆனால் சீனாவிடம் 6200 ஆர்டிலரி பீசஸ் தான் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
இந்திய அரசாங்கம் போஃபர்ஸ் பீரங்கி கம்பெனிக்கு 114 தனுஷ் ஆர்டிலரி பீரங்கிகள் / கே 9 வஜ்ரா மற்றும் மேம்பட்ட towed பீரங்கிகளை உருவாக்க முன்பதிவு செய்துள்ளது.
இத்தோடு 140 ஹெலி போர்ட்டபிள் ஆர்டிலரி பீரங்கிகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி சொன்னவுடனேயே சீன கைக்கூலிகள் சீனாவிடம் ஏவுகணைகள் அதிகமுள்ளதாக கூவ ஆரம்பிப்பார்கள். M 777 அல்டரா லைட் ஹோவிட்சைர்ஸ் / மல்டி பரல் ரொக்கெட் லோஞ்ச்சர்ஸ் போக இந்தியாவிடம் பினாகா மற்றும் பிரம்மோஸ் போன்ற ஏவுகணை தொகுப்பு உள்ளதை இங்கே அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்.
இவை இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஸ்வாதி ரேடார் கட்டுப்பாட்டுடன் இணைந்து செயல்படக்கூடியது. ஆனால் திபெத்திய பீடபூமியினை தளமாக கொண்டு நிறுத்தப்பட்டுள்ள சீன ஏவுகணைகள் / ரொக்கெட்டுகள் இந்திய எல்லைச்சாவடியினை தாக்க முடியாதவையாக கணிக்கப்படுகிறது.
இந்திய விமானப்படை
சீனாவின் 1000 முதல் 1200 ஏவுகணைகள் இந்தியாவை ஒரு பக்கத்தில் மட்டுமே சமாளிக்க போதுமானதாக கணிக்கப்படுகிறது. ஆனால் ஒரு இந்திய விமானப்படை தளத்தை முற்றிலுமாக செயலிழக்க செய்யவேண்டுமானால் சீனாவுக்கு 220 ஏவுகணைகள் தேவைப்படும் என ஒரு கணக்கு கூறுகிறது. எனவே சீனாவின் மிஸைல் ஸ்டாக் மிக மிக வேகமாக தீர்ந்து விடும்.
மத்திய சீனாவை தாக்க வேண்டுமானால் இந்தியாவிடம் இருக்கும் அக்கினி ஏவுகணைகள் போதுமானது. இந்தியாவில் இருக்கும் ஏவுகணை தளங்களை அழிக்க சீனாவுக்கு ஆயிரக்கணக்கில் ஏவுகணைகள் தேவைப்படும். அணு ஆயுதங்கள் இந்தியாவை விட சீனாவிடம் அதிகமான எண்ணிக்கையில் இருக்கலாம். ஆனால் அணுஆயுத போரில் ஆயுதங்களின் எண்ணிக்கை எல்லாம் பொருட்டே அல்ல.
இந்திய தேசம் மிக நீண்ட கடற்கரை பகுதி கொண்டது. அதில் பல கடற்படை தளங்களும் உள்ளது. கடல்வழியே இந்தியாவை தாக்க குறைந்தது ஆறு முதல் எட்டு விமானம் தாங்கி கப்பல்களை கொண்ட carrier படைப்பிரிவுகள் தேவை. சீனாவிடம் இருப்பதோ ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பல் படை.
ஸ்மால் அண்ட் மொபைல் நேவி
இந்தியாவின் அடுத்த பெரும் சக்தி ஸ்மால் அண்ட் மொபைல் நேவி. அதாவது மிகவும் சுறுசுப்பான அனுபவம் கொண்ட ஒரு கடற்படை. ஆனால் சீனாவின் 22400 கிலோமீட்டர் கடற்பகுதி மிக ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளது . ஏனென்றால் அவர்களின் கடற்பகுதியில் 14 எதிரி நாடுகள் உள்ளன. ஆகையால் சீனாவின் அதிக எண்ணிக்கையில் உள்ள போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் பல போர்முனைகளுக்கு பிரிக்கப்பட்டு விடும்.
சீன வர்த்தக கப்பல்கள் இந்திய பெருங்கடலை தாண்டித்தான் ஆபிரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளை அடைய வேண்டும். இவற்றை இந்திய பெருங்கடல் பகுதியில் தாக்கி அழித்தாலே சீன பொருளாதாரம் சரிந்து விடும். இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவை மிஞ்சிய கடற்படை ஏதுமில்லை. இந்தியாவின் தீபகற்ப வடிவமைப்பால் கிழக்கு கடற்கரை பகுதி மிக பாதுகாப்பான அமைப்பு கொண்டது.
அந்தமான் நிகோபார் தீவுகளிலிருந்து இலட்ச தீவு வரையிலான கடற்பகுதியில் இந்தியா மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். இந்தியாவுடன் கடற்போரில் சீனா ஈடுபட்டால் அதன் வணிக கப்பல்கள் / சரக்கு கப்பல்கள் / உணவு கப்பல்கள் / எரிபொருள் கப்பல்கள் / ஆயுத கப்பல்கள் என்று எதுவுமே இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நடமாட முடியாது.
சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரும் அழிவை சந்திக்க நேரும். இந்திய பெருங்கடலை அடைய முதலில் அமெரிக்க தாய்வான் கூட்டு கடற்படையை தாண்டி வர முடியுமா என்பதே பெரிய கேள்வி.
ஸ்கை ஃபிஸ்ட்
இந்தியாவின் ஸ்கை ஃபிஸ்ட் எனப்படும் விமானப்படை போர்க்கால நடவடிக்கையில் சீனாவின் விமானப்படையை சிதறடித்து விடும். இந்திய விமானப்படை மிக நவீனமானது. இந்திய விமானப்படை விமானிகள் வருடந்தோறும் உலகிலேயே தலைசிறந்த விமானிகளுடன் போட்டி போட்டு (joint war exercises) கூட்டு போர் பயிற்ச்சியில் ஈடுபட்டு மிகத் திறமைசாலிகளாக உள்ளனர்.ஆனால் சீனாவின் விமானிகளோ அப்படி இல்லை. அவர்கள் வெளி நாட்டு போர் விமானிகளுடன் அவ்வளவாக பயிற்சியில் ஈடுபட்டது இல்லை. இந்தியா வைத்திருக்கும் மிக்-29k மிக வலிமை வாய்ந்தது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட நவீன தேஜஸ் விமானம் குத்து டான்ஸ் போட்டு சீனாவின் J10 போர் விமானங்களை எளிதாக வீழ்த்தி விடும். ரஃபேல் விமானங்களின் வரவிற்கு பின்னர் ரஃபேல் / சுகோய் 30 MKI காம்பினேஷன் இந்திய விமானப்படையை வேறு உயரிய லெவலுக்கு கொண்டு போய் விட்டது. சீனாவின் J 10 மற்றும் J 20 விமானங்கள் இந்திய விமானப்படை விமானங்களுக்கு முன் தோன்றுவதற்கே தகுதியற்றவை.
சீனா உலகின் கோபத்திற்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் நட்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் / பிலிப்பைன்ஸ் / தென்கொரியா / வியட்நாம் போன்ற வளமான நாடுகளின் போர்க்கால உதவி இந்தியாவிற்கு என்றுமே உண்டு. சீனாவிற்கு சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் மட்டுமே போர்க்கால உதவிகள் புரியலாம் . ஆனால் பாகிஸ்தானோ ஏற்கனவே சாப்பாட்டிற்கு சீனாவிடம் கையேந்தும் ஒரு பிச்சைக்கார நாடு. ரஷ்யா என்றும் இந்தியாவினை பகைத்துக் ண்டு சீனாவிற்கு ஆதரவாக போரில் இறங்காது. இதுதான் சர்வதேச அரசியல் சதுரங்கம்.