சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியது இந்தியாவின் செயற்பாடு
இந்தியா - பிலிப்பைன்ஸ் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே தென்சீன கடல் பகுதியில் அண்மையில் நடைபெற்ற போா் பயிற்சிக்கு சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் சீனக் கடலின் பெரும் பகுதியை சீனா உரிமை கோருகின்ற அதே நேரம், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புரூனே, தாய்வான் ஆகிய நாடுகளும் அந்தப் பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என உரிமை கோரி வருகின்றன.
ஆனால், குறித்த நாடுகள் உரிமை கோரும் தென்சீன கடல் பகுதிகளிலும் சீன கடற்படை தொடா் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றது.
தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த ஆர்வம் காட்டும் ரணில்! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் (காணொளி)
பிலிப்பைன்ஸ் கப்பல்களை தாக்கிய சீன கப்பல்கள்
அண்மையில், இந்த கடல் பகுதியில் பயணித்த பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படைக் கப்பல்களை, சீன போா்க் கப்பல்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியதாக பிலிப்பைன்ஸ் முறையீடு செய்தது.
இதற்கிடையே, இம்மாத தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதியில் இந்திய கடற்படையும் பிலிப்பைன்ஸ் கடற்படையும் கூட்டு போா் பயிற்சியில் ஈடுபட்டன. இது சீனாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இந்த கூட்டு போா் பயிற்சி குறித்து சீன தலைநகா் பெய்ஜிங்கில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு சீன பாதுகாப்பு அமைச்சின் செய்தித்தொடா்பாளா் வூ கியான் பதிலளிக்கையில்.
இந்தியா - பிலிப்பைன்ஸ் போா் பயிற்சி
‘இந்தியா - பிலிப்பைன்ஸ் கூட்டுப் போா் பயிற்சி குறித்த அறிக்கையை சீனா கவனத்தில் கொண்டுள்ளது.
பல்வேறு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மூன்றாம் தரப்பு நாடுகளின் நலனையோ பிராந்திய அமைதியையோ பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது’ என தெரிவித்தார்.
இதேவேளை பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீன போா்க் கப்பல்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வூ கியான், ‘அது முழுவதும் தவறான பிரச்சாரம்’ எனக் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |