இந்திய ரஷ்ய உறவிற்கிடையிலான விரிசல்: ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தாக்கம்
ரஷ்ய உக்ரைனுக்கிடையிலான போரானது தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவின் நீண்ட கால நண்பரான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் நட்புறவானது சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே ரஸ்யாவுடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமான உறவைப் பேணிக்காத்து வருகிறது.
சமீபத்திய சில நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்திய ரஷ்ய உறவு
இந்தியாவானது ரஷ்யாவின் நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கண்டிக்கத் தவறினாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்தும் விலகிக் கொண்டுள்ளது.
40 வருட நட்பு நாடுகளாக இருந்தும், கடந்த 2019 முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவுக்கான ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி 50% சதவீதம் சரிந்துள்ளது.
SIPRI-யின் சமீபத்திய அறிக்கையின் படி, ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான ஆயுதங்களை இந்தியா தொடர்ந்து வாங்கி வந்தாலும், மொத்த ஆயுத இறக்குமதியில் இது 36% சதவீதம் சரிவை சந்தித்துள்ளதுடன் இந்தியாவின் தற்போது உள்ள மொத்த ஆயுத திறனில் 65% ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது.
ஏற்பட்டுள்ள திருப்பம்
ரஷ்ய ஆயுதங்களை பெரிதும் நம்பி இருக்கும் இந்தியா, தற்போது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மேம்பட்ட ஆயுதங்களை நோக்கி அதிகம் பார்க்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தம் மற்றும் நாட்டின் இராணுவ ஆயுத ஆதாரங்களை பன்முகப்படுத்த விரும்புதல் ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
அத்துடன் போர் விளைவாக S-400 ரக உபகரணங்களின் ஏற்றுமதி தாமதம் ஆகியவையும் காரணம் சொல்லப்படுகிறது.
2019 முதல் 2023 ஆண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில் அதிகப்படியான ஆயுத இறக்குமதி செய்த நாடாக இந்தியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |