இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சருக்கு ஜெய்சங்கர் வாழ்த்து
இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்திற்கு (Vijitha Herath) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (Dr. S. Jaishankar) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் (X) பதிவில் நேற்று (24) இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “விஜித ஹேரத் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.
இலங்கை - இந்திய உறவு
நமது நாகரீக உறவுகளை வலுப்படுத்தவும், பாரம்பரியமாக நெருங்கிய நட்புறவை வலுப்படுத்தவும், இரு நாட்டு மக்களின் நலனுக்காக பன்முக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் உறுதிபூண்டுள்ளோம்“ என குறிப்பிட்டுள்ளார்.
Congratulate Vijitha Herath on his appointment as Foreign Minister of Sri Lanka.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 24, 2024
Committed to reinforcing our civilizational ties, strengthening our traditionally close bonds of friendship and expanding our multifaceted cooperation for the benefit of both our peoples.
🇮🇳 🇱🇰
இதேவேளை இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |