இலங்கைக்குள் அதிரடியாக நுழைந்த இந்தியாவின் SIU விசேட கொமாண்டோக்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவருக்கான பாதுகாப்பு மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் SIU விசேட பாதுகாப்பு பிரிவினர் பிரதமர் மோடிக்கு இரகசியமான முறையில் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
அத்துடன், பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் 40க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்சி பெற்ற விமானிகள் இலங்கைக்கு வந்தனர்.
அதேபோன்று புலனாய்வு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வழங்க கூடிய முக்கிய அதிகாரிகள் பலர் இலங்கையை வந்தடைந்தனர்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது தனி பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டு ஒரு படையணியையே இலங்கைக்குள் நகர்த்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் பல விடயங்களைப் பற்றிப் பேசுகின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
