கஜேந்திரகுமாருக்கு அர்ச்சுனாவின் ஆதரவு : தையிட்டிக்கு எதிர்ப்பு : அம்பலமாகும் பின்னணி
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு (Gajendrakumar Ponnambalam) ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அரச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) அன்று தையிட்டி விவகாரத்தில் அவருக்கு ஏன் ஆதரவளிக்கவில்லை என வட மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வாக்களிக்குமாறு கூறியுள்ள அர்ச்சுனா, அன்று ஏன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னெடுத்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை ?
அந்த நேரத்தில் விகாரையை இடிக்க முடியாது மற்றும் அதற்கான மாற்றுவழி என கதைத்து விட்டு தற்போது இவ்வாறு ஒன்று கதைத்து இருக்கின்றார்” என அவர் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் பிரச்சினை, தையிட்டி விவகாரம், அர்ச்சுனாவின் கருத்து மற்றும் கடற்றொழில் பிரச்சினை குறித்து அவர் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
