சிறிலங்காவை கைவிட்ட இந்தியா..! வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை என சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இறக்குமதிகளுக்கு செலுத்த அந்நிய செலாவணி இல்லாது பொருளாதார நெருக்கடியால் கஷ்டங்களை அனுபவித்து வந்த இலங்கைக்கு இந்தியாவே அதிகளவில் உதவியுள்ளது.
இதுவரை 3.8 பில்லியன்
இந்தியா, இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. நாடு என்ற வகையில் இப்படியான உதவியை தொடர்ந்தும் வழங்க முடியாது என இந்திய அரசின் தகவல்கள் கூறுகின்றன.
சர்வதேச நாணய நிதிய த்துடனான பணியாளர் மட்ட இணக்கத்துக்கு பின்னர், இலங்கையின் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் ஸ்திரமாகி வருகிறது.
எனவே இதுவரை வழங்கப்பட்ட 3.8 பில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக இலங்கைக்கு புதிய நிதி உதவியை வழங்க இந்தியா திட்டமிடவில்லை என்று இந்திய தரப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்துக்குள்
மேலதிகமாக நிதிகளை வழங்கப்போவதில்லை
இதேவேளை இந்தியா, மேலதிகமாக நிதிகளை வழங்கப்போவதில்லை என்ற முடிவு தொடர்பில் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இலங்கை தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் இந்த ஆண்டின் இறுதியில் ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவுடன் இலங்கை நடத்த திட்டமிட்டுள்ள நன்கொடையாளர் மாநாட்டிற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படும் இலங்கை தரப்பு தெரிவித்துள்ளது.