தனித் தமிழீழமே தீர்வு- மாவீரர் நாளில் தமிழகத்திலிருந்து விடுக்கப்பட்ட அறைகூவல்!
இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கு தனித் தமிழழீழமே தீர்வு என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஈழத்தமிழர் உரிமைப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை சாதகமானதாக மாற்றுவதே தமிழக மக்கள் முன்பாக உள்ள கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது,
“இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்” என்று 2008 ஆம் ஆண்டு கடைசி மாவீரர் நாள் உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தாதாக ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழத்தமிழர் உரிமைப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை சாதகமானதாக மாற்றுவதே தமிழக மக்கள் முன்பாக உள்ள கடமை ஆகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போராட்ட வடிவங்கள் மாறலாம், போராட்டக் களங்கள் மாறலாம் ஆனால், தனித் தமிழீழம் மட்டும் தான் ஒரே தீர்வு எனவும் தமிழீழம் மலரும் நாள் விரைவில் அமைய பாடுபடுவோம் எனவும் பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.