கோட்டாபய மற்றும் ரணிலின் நெற்றிக்கு நேரே தமது நிலைப்பாட்டை தெரிவித்தது இந்தியா
இந்தியாவுடன் இணக்கம் காணப்பட்ட திட்டங்கள்
இலங்கைக்கு அதிக எரிபொருள் கடனை வழங்குவதற்குப் பதிலாக இந்தியாவுடன் இணக்கம் காணப்பட்ட திட்டங்களை துரிதப்படுத்துவதே சிறந்தது என இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய தூதுக்குழுவினர் அரச தலைவர் மற்றும் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கெகாழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எரிபொருளுக்கு மேலும் கடன்
இந்தியாவில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள மன்னார் காற்றாலை மின் நிலையம், கொழும்புத் துறைமுக மேற்கு கொள்கலன் முனையம், சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையம், திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்தித் திட்டம் ஆகியவை துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது.
எரிபொருளுக்கு மேலும் கடன் வழங்குவதற்கு இந்தியத் தரப்பிலிருந்து சாதகமான பதில் வரவில்லை என்றும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
