மண்டபம் முகாமிலிருந்து கைக்குழந்தையுடன் வெளியேற்றப்பட்ட குடும்பம் - நூற்றுக்கணக்கானோரின் எதிர்ப்பு போராட்டத்தால் பரபரப்பு!

Refugee Tamil nadu Sri Lanka India Refugee Camps
By Kalaimathy Nov 23, 2022 10:35 AM GMT
Report

இந்தியா, தமிழ் நாடு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் தமக்கான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றம்சாட்டி அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி தொடர்ந்து பல மணி நேரம் முகாம் நுழைவாயிலில் கைக்குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களிடம் அப்பகுதிக்கான ஆட்சியர் கடுமையாக நடந்து கொள்வதாகவும், அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் கோரிய ஆட்சியர்

மண்டபம் முகாமிலிருந்து கைக்குழந்தையுடன் வெளியேற்றப்பட்ட குடும்பம் - நூற்றுக்கணக்கானோரின் எதிர்ப்பு போராட்டத்தால் பரபரப்பு! | India Tamil Nadu Sri Lanka Refugee Camp Protest

மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் வழங்கவும், தனி பதிவு வழங்கவும் லஞ்சம் கேட்பதாக மண்டபம் மறு வாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர்.

இது குறித்து இலங்கை தமிழர் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் மற்றும் ராமநாதபுரம் ஆட்சியரிடமும் பல முறை முறைப்பாட்டு மனு அளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நேற்றைய தினம் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் போராட்ட இடத்திற்கு அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு முகாமிற்குள் சென்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட போரின் போது தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஈழத் தமிழர்கள் பலரும் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் தஞ்சம் அடைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி

மண்டபம் முகாமிலிருந்து கைக்குழந்தையுடன் வெளியேற்றப்பட்ட குடும்பம் - நூற்றுக்கணக்கானோரின் எதிர்ப்பு போராட்டத்தால் பரபரப்பு! | India Tamil Nadu Sri Lanka Refugee Camp Protest

அதேபோல் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அடைக்கலம் தேடி தமிழகத்திற்கு அகதிகளாக வரும் சுமார் 200 பேர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியராக சிவகுமாரி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கும்மிடிப்பூண்டி முகாமில் இருந்து பிரசவத்திற்காக மண்டபம் முகாமில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்த குடும்பத்தை கைக்குழந்தையுடன் முகாமை விட்டு வெளியே அனுப்பியதாகவும், மண்டபம் முகாமிற்குள் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் நான்கு சக்கர வாகனத்தை முகாமிற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை கண்டித்தே மண்டபம் முகாம் தனித்துணை ஆட்சியரை உடனடியாக மாற்ற கோரி நூற்றுகணக்கான இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாம் நுழைவு வாயிலின் தரையில் அமர்ந்து கைக்குழந்தையுடன் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உறுதியளித்த அதிகாரிகள்

மண்டபம் முகாமிலிருந்து கைக்குழந்தையுடன் வெளியேற்றப்பட்ட குடும்பம் - நூற்றுக்கணக்கானோரின் எதிர்ப்பு போராட்டத்தால் பரபரப்பு! | India Tamil Nadu Sri Lanka Refugee Camp Protest

ஆனால் தனித்துணை ஆட்சியரை மாற்றி உத்தரவிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக திட்டவட்டமாக தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்று தனித்துணை ஆட்சியர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசலில் சுமார் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழர்கள் கைக்குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

06 Aug, 2025
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017