மன்னாரை குறி வைக்கும் இந்தியா : தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி
மன்னார் (Mannar) மற்றும் பூநகரியை குறிவைத்து இந்திய அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரித்தானிய (United Kingdom) அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கையும் கிழக்கையும் தன் வசப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா (India) உறுதியாகவுள்ளது.
இதனடிப்படையில்தான் மன்னார் வைத்தியசாலை மற்றும் பலாலி விமான சேவை என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்தியா நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் அரசியல், சர்வதேச அரசியல், இந்தியா - இலங்கை அரசியல் நகர்வு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை வருகை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
