ஒக்டோபர் 10 வரை காலக்கெடு : இந்தியா எடுத்த உறுதியான முடிவு
41 தூதரக அதிகாரிகளை ஒக்டோபர் 10ஆம் திகதிக்குள் நீக்குமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாகவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்ததைத் தொடர்ந்து அண்மைய வாரங்களில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.
இராஜதந்திர விலக்கு
பல ஆண்டுகளாக இந்தியாவால் தேடப்பட்டு வந்த 45 வயதான நிஜ்ஜார், ஜூன் 18 அன்று சர்ரேயில் உள்ள சீக்கிய கோவிலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது என்று இந்தியா மறுத்து வருகிறது.
இனவாத பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவ்வாறு செயற்படுகிறார்கள் என்கிறார் கெமுனு விஜேரத்ன
இந்த நிலையில், இந்தியாவில் கனடாவுக்கான 62 இராஜதந்திரிகள் உள்ளனர், இந்த எண்ணிக்கையை 41 ஆக குறைக்க வேண்டும் என்று இந்தியா கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒக்டோபர் 10 க்குப் பிறகு இந்தியாவில் தங்கியிருக்கும் இராஜதந்திரிகளின் இராஜதந்திர விலக்கை ரத்து செய்வதாக இந்தியா அச்சுறுத்தியதாகவும் பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது.